ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » தமிழ்நாடு முழுவதும் 47 மேம்பாலங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்

திருமங்கலம், மூலக்கடை மேம்பாலங்களை ஜெயலலிதா திறந்து வைத்தார்: மாநிலம் முழுவதும் 47 பாலங்கள் திறப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாது:–
ஒரு மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளில் சாலைக் கட்டமைப்பு வசதி மிகமுக்கிய பங்கினை வகிக்கிறது. சாலைக் கட்டமைப்பு வசதியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுவதிலும், சாலைகள் மற்றும் பாலங்களைப் பராமரித்தல் போன்ற பல்வேறு பணிகளை தமிழ்நாடு முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், சென்னை, திருமங்கலத்தில் 60 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 806 மீட்டர் நீளமுள்ள மேம்பாலத்தை காணொலிக் காட்சி மூலமாக தமிழ்நாடு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார். இந்த மேம்பாலத்தினால் அண்ணா நகர், முகப்பேறு, பாடி, அம்பத்தூர், கொளத்தூர், மாதவரம் மற்றும் செங்குன்றம் பகுதி மக்கள் பெரிதும் பயனடைவர்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம்–மலைப்பட்டில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; வேலூர் மாவட்டம்–சுந்தரம் பள்ளியில் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; திருவண்ணாமலை மாவட்டம் மணலவாடியில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;
சேலம் மாவட்டம்–எடப்பட்டிபுதூரில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், இராமநாயக்கன் பாளையத்தில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், வீரகனூரில் 3 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், ஜல்லூத்துப்பட்டியில் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், ஏத்தாப்பூரில் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;
நாமக்கல் மாவட்டம்–கோணப்பாதையில் 1 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், வெள்ளக்கல்பட்டியில் 1 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், சோமனப்பட்டியில் 2 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், வேலகவுண்டம்பட்டியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;
விழுப்புரம் மாவட்டம்–கலித்திராம்பட்டில் 13 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், பிள்ளையார் குப்பத்தில் 8 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், புளியங்கோட்டையில் 1 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முஸ்குந்தா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம்;
ஈரோடு மாவட்டம்–சித்தாரில் 1 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், கொமாரபாளையத்தில் 1 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், நாவிதன் காட்டுவலசுவில் 1 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், துறையம்பாளையத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், நல்லியம் பாளையத்தில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், தோப்புக்காட்டில் 1 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், முள்ளம்பட்டில் 1 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், பெத்தாம் பாளையத்தில் 1 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;
கோயம்புத்தூர் மாவட்டம்–சுகுணாபுரத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், மதுக்கரையில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; திண்டுக்கல் மாவட்டம்–முள்ளிப்பாடியில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஓலையூரில் 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; தஞ்சாவூர் மாவட்டம்–துறையூரில் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், பின்னையூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், வெங்கரையில் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;
கடலூர் மாவட்டம்–தென்னம்பாக்கத்தில் 2 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; நாகப்பட்டினம் மாவட்டம்–கோனேரிராஜபுரத்தில் 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், மணியன்தீவில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; புதுக்கோட்டை மாவட்டம்–சிறுவரை கிராமத்தில் 4 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், வீரமங்கலத்தில் 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;
விருதுநகர் மாவட்டம்–ஆமத்தூரில் 3 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு பாலங்கள், மேலத்தொட்டி யாப்பட்டியில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், மம்சாபுரத்தில் 1 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், வெற்றிலை ஊரணியில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; திருப்பூர் மாவட்டம்–நவநாரியில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;
சென்னை மூலக்கடையில் 49 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம்; கோயம்புத்தூர் மாவட்டம்–கணபதி (டெக்ஸ்டூல்) அருகில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் இருவழி மேம்பாலம்;
சென்னை–வியாசர்பாடியில் 80 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஜி.என்.டி. சாலையில், கி.மீ.4/3ல் உள்ள கீழ்ப்பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலம்; வேலூர் மாவட்டம்–உள்ளியில் 18 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரயில்வே கடவு எண். 69க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம்; கோயம்புத்தூர் மாவட்டம்–இருகூரில் 18 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரயில்வே கடவு எண். 2க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம், ஜமீன் ஊத்துக்குளியில் 20 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரயில்வே கடவு எண். 3க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள கீழ்பாலம்;
என மொத்தம் 364 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்கள் மற்றும் பாலங்களை தமிழ்நாடு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.
சேலம் மாவட்டம் சேலம் தெற்கில் 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உட்கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகக் கட்டடம், மேட்டூரில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் மாளிகை; இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் மாளிகை;
என மொத்தம் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம் மற்றும் பயணியர் மாளிகைகளை தமிழ்நாடு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் இன்று நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் திறந்து வைக்கப்பட்ட பாலங்கள் மற்றும் கட்டடங்களின் மொத்த மதிப்பு 365 கோடியே 76 லட்சம் ரூபாய் ஆகும்.

0 comments

Leave a Reply