ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » சென்னை புறநகரில் உள்ள 4 ஏரிகளின் கரைகளை உடைக்கப்பட்டதால், வெள்ளத்தில் மூழ்கின.

Image result for வெள்ளம்
சென்னை புறநகரில் உள்ள 4 ஏரிகளின் கரைகளை உடைக்கப்பட்டதால், அவற்றின் சுற்றுப்புறப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்தச் செயலில் ஈடுபட்டது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 சென்னை புறநகரில் உள்ள பெரிய ஏரியான பல்லாவரம் ஏரி 150 ஏக்கர் பரப்பளவு உடையது. ஆக்கிரமிப்புகளால் ஏரி 50 ஏக்கராக சுருங்கிவிட்டது. இந்த நிலையில் பலத்த மழையால், ஏரியின் ஆக்கிரமிப்பு பகுதியில் வெள்ளம் புகுந்தது.
 இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்கள் சஞ்சீவ் நகரில் உள்ள கரையை உடைத்துவிட்டனர். இதனால் ஏரியில் தேங்கியிருந்த தண்ணீர் பழைய பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது. அங்கிருந்தோரை தேசிய பேரிடர் மீட்புக் குழு, கடலோரப் பாதுகாப்புப் படை குழும கமாண்டோ வீரர்கள், காவல் துறையின் கமாண்டோ வீரர்கள், தீயணைப்புப் படையினர் ஆகியோர் ஒருங்கிணைந்து படகு மூலம் மீட்டனர்.
 மேலும், பொதுப்பணித் துறையினரும் ஏரியின் உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல், ராஜகீழ்ப்பாக்கம், மாடம்பாக்கம், குரோம்பேட்டை வீரராகவன் ஏரி ஆகிய 3 ஏரிகளையும் கரைகளை ஆக்கிரமித்தவர்களே உடைத்து தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். இந்த 4 ஏரிகளும் உடைக்கப்பட்டதால்தான் புறநகர் பகுதிகளான வேளச்சேரி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, குரோம்பேட்டை, பழவந்தாங்கல், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
 இதையடுத்து, ஏரிகளை உடைத்தவர்களைக் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையங்களின் அதிகாரிகளுக்கு உயர் அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, விசாரணை நடக்கிறது.
 மேலும், ஏரிகளுக்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸார் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
 

0 comments

Leave a Reply