ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » தூத்துக்குடி மாவட்டத்தில் 13 லட்சத்து 39 ஆயிரத்து 354 வாக்காளர்கள் உள்ளனர் என்றார் ஆட்சியர்

Image result for தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணைய சார்புச் செயலர்  பிரிவு அலுவலர்  ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், ஆட்சியர் ம. ரவிகுமார் பேசியது: தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டு அக்டோபர் 15 ஆம் தேதி வரை 6 லட்சத்து 63 ஆயிரத்து 559 ஆண் வாக்காளர்கள், 6 லட்சத்து 75 ஆயிரத்து 750 பெண் வாக்காளர்கள், இதர பிரிவினர் 45 பேர் என மொத்தம் 13 லட்சத்து 39 ஆயிரத்து 354 வாக்காளர்கள் உள்ளனர்.  இதுவரை 17 ஆயிரத்து 999 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 19 ஆயிரத்து 357 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 
Image result for தேர்தல்
மேலும், ஆன்லைன் மூலம் 1,170 பேரும், நேரடியாக 51 ஆயிரத்து 522 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.

கூட்டத்தின்போது,  வாக்காளர் பட்டியலில் குழப்பம் உள்ளதாகவும், பல்வேறு இடங்களில் இரட்டைப் பதிவு நிகழ்துள்ளதாகவும், சிலரின் பெயர் தேவையின்றி நீக்கப்பட்டுள்ளதாகவும் திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்தனர்.
Tags: arumuganeri

0 comments

Leave a Reply