ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » ரூ.1.27 கோடி சம்பளம் கூகுளிடமிருந்து பெறும் டெல்லியைச் சேர்ந்த மாணவர்

Image result for chetan kakkar
மென்பொருள் நிறுவனங்களின் ஜாம்பவானாகத் திகழும் கூகுள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் முக்கியக் கல்லூரிகளில் இருந்து கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தனது நிறுவன பணியாளர்களை தேர்ந்தெடுத்து வருகிறது. 

அந்த வகையில் இந்த வருடம் டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மாணவரான சேத்தன் காக்கர் தனது திறமையால்  கூகுளை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார். 

அந்தப் பல்கலைக்கழகத்தில் இதுவரை யாரும் பெற்றிடாத தொகையை சேத்தன் காக்கர் சம்பளமாகப் பெற்றுள்ளார். ஒரு வருடத்திற்கு 1,90,000 டாலர் (சுமார் 1.27 கோடி ரூபாய்) சம்பளத்துடன் கூகுள் நிறுவனத்தால் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதுவரை  அதிகப்படியாக வழங்கப்பட்ட சம்பளத் தொகை 93 லட்சம் ரூபாய் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments

Leave a Reply