ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » 11 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அறிவித்து

Image result for rain school students
தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், 11 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
 தற்போதைய வங்கக்கடல் நிகழ்வு காரணமாக, நாளை (திங்கட்கிழமை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நாமக்கல், நாகை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கரூர், தருமபுரி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments

Leave a Reply