ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்கு வீணாகச் செல்கிறது.Image result for நயினார் குலசேகரன்
ஸ்ரீவைகுண்டம் அணையைத் தாண்டி விநாடிக்கு 10ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலுக்குச் செல்வதால், பாசனக் குளங்களை உடனடியாகத் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் தொடர் மழையால் தாமிரவருணி ஆற்றுப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மருதூர் அணை மேலக்காலில் இருந்து 1300 கனஅடி தண்ணீரும், மருதூர் கீழக்காலில் இருந்து 400 கன அடி தண்ணீரும், ஸ்ரீவைகுண்டம் அணை தென்காலில் இருந்து 300 கன அடி தண்ணீரும், வடகாலில் இருந்து 300 கன அடி தண்ணீரும் வெள்ளிக்கிழமை திறந்துவிடப்பட்டது. சடயனேரி கால்வாயிலிருந்து 400 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
மேலும், தாமிரவருணி ஆற்றின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்கு வீணாகச் செல்கிறது.
அணையில் நடைபெற்றுவந்த தூர்வாரும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 53 குளங்களில் பெரும்பாலான குளங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைத் தண்ணீரை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திடும் வகையில் குளங்களை முழுமையாகத்  தூர்வார வேண்டும் என தாமிரவருணி நதிநீர்ப் பாதுகாப்புப் பேரவை அமைப்பாளர் நயினார் குலசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments

Leave a Reply