ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் சுதந்திரப்போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலை மறுப்பு.ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம் காந்திஜெயந்திநாளில் தொடக்கம்


     சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் சுதந்திரப்போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலை மறுப்பு. 1942 இல் உப்புச்சத்தியாகிரகம் உத்தமர் காந்திஜியால் தொடங்கப்பட்ட போது ஆறுமுகநேரியிலும் கீரனூர் உப்பளத்தில் உப்பு காய்ச்சும் போராட்டத்தை ஆறுமுகநேரியில் வாழ்ந்த தியாகப் பெருமக்கள் 33 பேர் கலந்து கொண்டனர்.சிறை சென்றனர்.
    டிசிடபிள்யூ நிறுவனத்தின் மூலப்பொருள் உப்பு,இந்த நிறுவனத்தை உருவாக்கியவர் சுதந்திரப்போராட்டத் தியாகி குஜராத்தில் பிறந்த பத்மபூஷண் சாகுசிரியான்ஸ் பிரசாத் ஜெயின் ஆவார்.தற்போதைய நிர்வாகம் வேலை வாய்ப்பில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு உப்புச் சத்தியாகிரகத்தில் சிறை சென்ற தியாகிகளின் குடும்பத்திற்கு எவ்வித முன்னுரிமையும் வழங்காமல். தியாகிகளின் தியாகத்தை அவமதித்துள்ளது.
        தடியெடுத்தவன் தண்டல்காரன் போல காளான் போல உருவெடுத்து மறையும் அரசியல் கைத்தடிகளுக்கும், ஆதரவு வால்போஸ்ட் அடிக்கும் அடிமைகளுக்கும் ,ஜால்ரா போடும் தலைவர்களுக்கும்  கொடுக்கும் மரியாதையை தியாகிகள் குடும்பத்திற்கு கொடுக்கத் தவறிய DCW நிர்வாகத்தைக் கண்டித்தும், வேலை கோரும் தியாகிகளின் குடும்பத்தினருக்கு எவ்வித சாக்குப்போக்கும் சொல்லாமல் வேலை வழங்கிடவும் கோரி ஒரு லட்சம் கையெழுத்து இயக்கத்தை தியாகி வாரிசுகள் சங்கம் விரைவில் சென்னையில் தொடங்கிட உள்ளது.
        வருங்காலங்களில் DCW  விடம் நன்கொடை கோருவதில்லை வழங்கும் நன்கொடைகளை பெறுவதில்லை என்று சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் வாரிசுகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
      காந்திஜெயந்தி நாளில் கையெழுத்து இயக்கத்தை தலைவர் டாக்டர் த.த.தவசிமுத்து தொடங்கி வைக்கிறார். 
Tags: Daily News

0 comments

Leave a Reply