ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நவம்பர் 16-ந் தேதி முதல் மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நவம்பர் 16-ந் தேதி முதல் மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 14-ந்தேதி போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி அறைக்குள் புகுந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றமே தாமாக முன் வந்து வழக்கை எடுத்தது.
தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு தேவையில்லை என்று விளக்கம் அளித்தது. அதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், 6 மாத காலமாவது சோதனை அடிப்படையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க முன் வர வேண்டும். இதுதொடர்பாக மத்திய- மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதனிடையே மத்திய தொழில் பாதுகாப்பு படை உயரதிகாரிகள் கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வு நடத்தியிருந்தனர். இந்நிலையில் இன்று இது தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான பெஞ்ச், நவம்பர் 16-ந் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்; கடந்த காலங்களில் நிகழ்ந்த சம்பவங்களைக் கருத்தில் கொண்டு இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, அகமதாபாத் உயர் நீதிமன்றங்களில் ஏற்கனவே மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு அமலில் உள்ளது. ஆகையால் மத்திய பாதுகாப்புப் படைக்காக ரூ16 கோடியை மத்திய அரசுக்கு தமிழக அரசு செலுத்த வேண்டும்.
வரும் 7 நாட்களுக்குள் மத்திய அரசு கோருகிற டெபாசிட் தொகையை தமிழக அரசு செலுத்த வேண்டும்; அடுத்த 6 மாதங்களுக்கு மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 650 மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த தயார் என ஏற்கெனவே மத்திய அரசும் தெரிவித்திருந்தது. இதனால் 650 மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.
Tags: arumuganeri

0 comments

Leave a Reply