ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» News » திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களில் 8–வது கோவிலான திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் ஆவணி திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 9.10 மணிக்கு கோவில் கொடிமரத்தில் ஆவணி திருவிழா கொடியேற்றப்பட்டது.
விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி க.சிவராம் பிரபு, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பெருமாள் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
17–ந்தேதி, தேரோட்டம்5–ம் திருநாளான வருகிற 12–ந்தேதி (சனிக்கிழமை) இரவில் கருடசேவை நடக்கிறது. 10–ம் திருநாளான வருகிற 17–ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 11–ம் திருநாளான வருகிற 18–ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி க.சிவராம் பிரபு தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Tags: News

0 comments

Leave a Reply