ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » பிளஸ் 2 காலாண்டு தேர்வு 10ம் தேதி துவக்கம்: 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 14ம் தேதி துவக்கம்


பிளஸ் 2, மற்றும் 10ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு போலவே காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித் தாள் வழங்கப்பட்டு தேர்வுகள் நடக்கிறது. இதன்படி நடப்பாண்டுக்கான காலாண்டுத் தேர்வுகள் அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டுத் தேர்வுகள் வரும் 10ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை நடக்கிறது. காலாண்டுத் தேர்வுகள் துவங்கும் முன்னர் பள்ளிகளில் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. காலை 10 மணிக்கு துவங்கும். முதல் 10 நிமிடங்கள் கேள்வித்தாள் படிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.  10.10 மணி முதல் 10.15 மணி வரை மாணவர்கள் விடைத்தாளில் முதல் பக்கத்தில் உள்ள விவரங்களைப் படித்து பூர்த்தி செய்ய வேண்டும். 10.15 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு எழுத நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி காலாண்டுத் தேர்வுகள் துவங்கி, 25ம் தேதி முடிகிறது. காலை 10 மணிக்கு இவர்களுக்கான தேர்வுகள் துவங்குகிறது. முதல் 10 நிமிடங்கள் கேள்வித்தாளை வாசிக்கவும், அடுத்த 5 நிமிடங்கள் விடைத் தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்பட்டுள்ளது. காலை 10.15 மணி முதல்மதியம் 12.45 மணி வரை தேர்வு எழுத நேரம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு மாவட்டக் கல்வி அதிகாரிகள் கூறினர்.
Tags: Daily News

0 comments

Leave a Reply