ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » அரசின் நலத்திட்டங்கள் பெற ஆதார் எண் கட்டாயமல்ல : சிலிண்டர் வழங்க கேட்கலாம் - உச்ச நீதிமன்றம்

Image result for ஆதார்


அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் பெறுவது கட்டாயமல்ல என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், பொது விநியோக திட்டம், சிலிண்டர் வழங்குவதற்கு ஆதார் எண்ணை அரசு கேட்கலாம் என்று கூறியுள்ளது.

நாடு முழுவதும் மக்களுக்கு ஒரே அடையாள அட்டை வழங்கும் வகையில் ஆதார் அட்டை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் உதவிகள் பெற ஆதார் அட்டை அவசியம் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் செலமேஸ்வர், எஸ்.ஏ.போப்டே, சி.நாகப்பன், ஆதார் அட்டை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதன் பிறகு வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

இதையடுத்து, பிற்பகலில் இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் நல திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், "ஆதார் எண் கட்டாயம் அல்ல என்ற தகவலை மக்களுக்கு ஊடகங்கள் மூலம்  தெரியப்படுத்த வேண்டும். பொது விநியோகம், சிலிண்டர் வழங்குவதற்கு ஆதார் எண்ணை அரசு கேட்கலாம். ஆதார் அட்டைக்காக சேகரிக்கப்படும் தனி மனித தகவல்களை வெளிநபர்களுக்கு வழங்கக் கூடாது" என்று உத்தரவு பிறப்பித்தது.
Tags: Daily News

0 comments

Leave a Reply