ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » துாத்துக்குடி மைசூர் விரைவு ரயில் நேரத்தை மாற்றியமைக்க கோரி துாத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி தென்னக பொதுமேலாளரை சந்தித்து மனு

துாத்துக்குடி மைசூர் விரைவு ரயில் நேரத்தை மாற்றியமைக்க கோரி துாத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி தென்னக பொதுமேலாளரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, துாத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து மைசூர் துாத்துக்குடி விரைவு ரயில் காலை 11,15 மணிக்கு துாத்துக்குடிக்கு வருகிறது. அதுபோல் துாத்துக்குடி மைசூர் விரைவு ரயில் மாலை 4.35 மணிக்கு புறப்படுகிறது.  இந்த ரயில் புறப்படும் நேரம், வரும் நேரம் சரியில்லாத காரணத்தால் மைசூர், பெங்களூரிலிருந்து துாத்துக்குடி மற்றும் தென்மாவட்டத்திற்கு வரும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 

இந்த ரயிலை கரூர், நாமக்கல், சேலம், ராசிபுரம் வழியாக மாற்றியமைத்தால் பயண நேரம் 1.30 மணிநேரம் குறையும். ஆனால் ரயில்வே நிர்வாகம் நாமக்கல் வழியாக செல்ல மறுத்து வருகிறது. ஆதலால் இந்த ரயிலின் பயண நேரத்தை குறைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். மேலும் மாலை 6.00 மணிக்கு இந்த ரயில் துாத்துக்குடியிலிருந்து புறப்படும் வகையிலும், காலை 9.30க்கு வந்தடையுமாறும், நேரத்தை மாற்றியமைக்க வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். 

இதுபோல் துாத்துக்குடி சென்னை முத்துநகர் ரயில் காலை 6.30 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன். மேலும் துாத்துக்குடி வந்து செல்லும் விரைவு ரயிலையும், நல்ல புதிய ரயில் பெட்டிகளை இணைத்து நல்ல முறையில் பராமரித்து இயக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.


Tags: Daily News

0 comments

Leave a Reply