ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் மீண்டும் புதுப்பிக்க சலுகை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும், ஆன்லைன் வழியாக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.
 
இதனால் இணையதளத்தில் புதிய மனுதாரர்கள் கல்வித்தகுதி பதிவு, புதுப்பித்தல், கூடுதல் கல்வித் தகுதி பதிவு போன்ற பணிகளை ஆன்லைன் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பிப்ரவரி 2014 முதல் ஜூலை 2015 வரை உள்ள புதுப்பித்தல் காலக்கெடுவுக்குள் புதுப்பிக்கத் தவறிய மனுதாரர்கள் 18 மாத சலுகையின் மூலம் ஆன்லைன் மூலம் புதுப்பிக்கலாம்.
 
இந்த சலுகை புதுப்பித்தலுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வரவோ அல்லது மனு செய்யவோ தேவை இல்லை. வீட்டில் உள்ள இணையதள வசதி உடைய கம்ப்யூட்டரிலோ அல்லது ஏதேனும் இண்டர்நெட் மையங்களிலோ வருகிற 31-ந் தேதிக்குள் புதுப்பிக்கலாம். இப்புதுப்பித்தல் தொடர்பான சந்தேகங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண் 0461-2340159 தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
Tags: Daily News

0 comments

Leave a Reply