ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » கோவில் பூசாரிகள் அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகை

தூத்துக்குடியில், ஓய்வூதியத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி கோவில் பூசாரிகள் அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிராம பூசாரிகளுக்கு மாதச் சம்பளம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், நலவாரிய சலுகைகள் வழங்க வேண்டும், ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி துாத்துக்குடி அழகேசபுரத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது.  

விஷ்வ ஹிந்து பரிக்ஷத் குமரி, நெல்லை, துாத்துக்குடி மாவட்ட விபாக் செயலாளர் வசந்தகுமார், பேரவை தெற்கு மாவட்ட செயலாளர் சரவணன் பூசாரி, வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பையா பூசாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஷ்வ ஹிந்து பரிக்ஷத் மாவட்ட பொருளாளர் அழகுராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் வித்தகன் உட்பட கோவில் பூசாரிகள் திரளானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் உதவி ஆணையாளரிடம் மனு அளித்தனர்.
Tags: Daily News

0 comments

Leave a Reply