ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியில் மின் தடை அறிவிப்பு


தூத்துக்குடி அருகே உள்ள அய்யனார்புரம் துணைமின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஆக.10) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
இதனால், மாப்பிள்ளையூரணி, அய்யனார்புரம், திரேஸ்புரம், தாளமுத்துநகர், டேவிஸ்புரம், தருவைகுளம், சிலுவைப்பட்டி, அழகாபுரி, ராசபாளையம், பட்டினமருதூர் ஆகிய பகுதிகளில் அன்றையதினம் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோட்டத்துக்குள்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, குரும்பூர் ஆகிய உபமின்நிலையங்களில் ஆக. 13ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. எனவே, புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டணம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கணி, தேமான்குளம், திருக்களுர் போன்ற பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Tags: Daily News

0 comments

Leave a Reply