ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » தமிழன்யா....கூகுளின் புதிய நிறுவனத்திற்கு தலைமை அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை நியமனம்

கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி பேஜ், புதியதாக அல்பபெட் நிறுவனத்தை அமைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். புதிய தேடுதல் நிறுவனத்திற்கு சுந்தர் பிச்சை தலைமை அதிகாரியாக செயல்படுவார் என்று தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக பேஜ் வெளியிட்டு உள்ள பிளாக் தகவலில், அல்பபெட்  நிறுவனத்திற்கு சி.இ.ஓ.வாக சுந்தர் பிச்சை செயல்படுவார். கூகுள் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனர் செர்ஜி பிரின் அதன் தலைவராக இருப்பார் என்று குறிப்பிட்டு உள்ளார்.

பேஜ் வெளியிட்டு உள்ள தகவலில், எங்களுடைய நிறுவனம் இன்று நன்றாக செயல்பட்டு வருகிறது, இருப்பினும் நாங்கள் இதனை தெளிவாக்கவும், மேலும் பயனுள்ளதாகவும் உருவாக்கவேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். எனவே நாங்கள் புதிய கம்பெனியை உருவாக்குகிறோம். நிறுவனம்  அல்பபெட் என அழைக்கப்படும். புதிய நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக தற்போது கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பை வகித்துவரும் சுந்தர் பிச்சை செயல்படுவார். என்று தெரிவித்து உள்ளார். நிறுவனத்திற்காக சுந்தர் பிச்சையின் செயல்பாடு மற்றும் அர்ப்பணிப்பு செர்ஜியையும் என்னையும் மிகவும் உற்சாகபடுத்தி உள்ளது என்றும் பாராட்டு தெரிவித்து உள்ளார்.  சுந்தர் பிச்சை புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துவார் என்று எனக்கு தெரியும் என்றும் லாரி பேஜ் தெரிவித்து உள்ளார். 

43 வயதான சுந்தர் பிச்சை சென்னையைச் சேர்ந்தவர்.சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் படித்த இவர் பின்னர் ஐ.ஐ.டி. கரக்பூரில் பொறியியல் பட்டமும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் உள்ள வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர்.கூகுள் நிறுவனத்தில் சேரும் முன் மெக்கென்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். தற்போது தலைமை துணைத்தலைவராக இருக்கும் இவர், ஆண்ட்ராய்ட், கூகுள் குரோம், கூகுள் என்ஜினியரிங், ஆப்ஸ், ஜிமெயில், கூகுள் டாக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளைக் கவனித்து வந்தவர்.2008ம் ஆண்டு பிச்சை தலைமையிலான குழு தான் குரோம் பிரவுசரை உருவாக்கியது.இந் நிலையில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Tags: Daily News

0 comments

Leave a Reply