ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » மதுவிலக்குக் கோரி போராடி மரணமடைந்த சசிபெருமாள் மகன் வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

காந்தியவாதி சசிபெருமாள் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்திக் கோரி அவரது மூத்த மகன் விவேக் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு, சசிபெருமாள் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று விவேக் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது வரும் 13ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags: Daily News

0 comments

Leave a Reply