ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சாதனை

தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் நடத்தப்படும் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி மூலம் கடந்த ஓராண்டில் ரூ. 5 கோடிக்கு காய்கனிகள் விற்பனை செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கான சாதனை விழா மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் நுகர்வோர் அங்காடியைப் பார்வையிட்டுப் பேசியதாவது:
தமிழக அரசு கொண்டு வந்த அம்மா திட்டம், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா சிமென்ட், அம்மா உப்பு என அனைத்துமே பொது மக்களுக்கு மிகவும் பயனள்ளதாக இருக்கிறது. இதேபோல, முதல்வர் அறிவித்த பண்ணை பசுமை காய்கனி கடையும் ஏழை, நடுத்தர மக்களுக்கு ஒரு வரபிரசாதமாகும்.
மாநிலத்தில் பல இடங்களில் பண்ணை பசுமை காய்கனி கடை நடைபெற்றாலும் தூத்துக்குடி தான் விற்பனையில் மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது. இங்கு இதுவரை ரூ. 5 கோடியே 8 லட்சத்து 95 ஆயிரத்து 767-க்கு விற்பனை நடைபெற்றுள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 1 லட்சத்து 40 ஆயிரத்து 209 ரூபாய்க்கு விற்பனை நடைபெறுகிறது என்றார் அவர்.
முன்னதாக, தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் ஆவின் பால் சில்லறை விற்பனை நிலையத்தை சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ், மாவட்ட வருவாய் அலுவலர் ச. முருகையா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பிடிஆர் ராஜகோபால், துணைப் பதிவாளர் சிவகாமி, மக்கள் தொடர்பு அலுவலர் கு. தமிழ் செல்வராஜன், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் ஜெயசங்கர், தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் மாணிக்கராஜா, மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Tags: Daily News

0 comments

Leave a Reply