ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» » சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்




 


சிறுபான்மையின மாணவ/ மாணவியர்கள் கல்வி உதவித் தொகை பெற வருமானச் சான்றிதழை பெற்றோரின் சுயசான்றொப்பம் இட்டு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை மற்றும் தொழிற்படிப்பு/ தொழில்நுட்ப படிப்பு பயிலும் கிருத்துவ/ இஸ்லாமிய/ புத்த/ சீக்கிய/ பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சாhந்த சிறுபான்மையின மாணவ/ மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டங்களின் கீழ் உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. 

இத்திட்டங்களின் கீழ் உதவித்தொகைப் பெற வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான வருமானச் சான்றினைப் பொறுத்த மட்டில் பெற்றோர் / பாதுகாவலரின் அரசின் வருவாய் துறை (Revenue Department) மூலம் அளிக்கப்படும் வருமானச் சான்றிதழை மட்டுமே பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையை தற்போது மத்திய அரசு தளர்வு செய்து முந்தைய ஆண்டுகளில் வழங்கியதை போன்று பெற்றோர்/ பாதுகாவலர் அவர் தம் வருமானம் குறித்து சுயசான்று (Self-declaration) அளித்தாலே போதுமானது என்று ஆணை பிறப்பித்துள்ளது. அதேபோன்று மாணவர்ள் கல்வி உதவித் தொகை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கும் முந்தைய ஆண்டு மதிப்பெண் பட்டியலை சுய சான்றொப்பம் (Self attestation) செய்து சமர்ப்பித்தாலே போதுமானது எனவும் மைய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சிறுபான்மையின மாணவ/ மாணவியர்கள் மேற்குறிப்பிட்ட வழிமுறையினை பின்பற்றி கல்வி உதவித் தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Tags:

0 comments

Leave a Reply