ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » குரும்பூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்-விவசாயிகளுக்கு அரிய வாய்ப்பு

Image result for நெல் விவசாயம்
இதுபற்றி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் குரும்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் முன்கார் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லுக்கு உரிய விலை கிடைக்க ஏதுவாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் குரும்பூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவுபடி கிரேடு ஏ ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1470-க்கும், மற்ற ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1410- க்கும் கொள்முதல் செய்யப்படும். நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் குரும்பூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன் பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: Daily News

0 comments

Leave a Reply