ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » ஆறுமுகநேரி பேரூராட்சி வீசும் எலும்பு துண்டை நக்கிவிட்டு நடவடிக்கை எடுக்காதது யார்

இந்திய விடுதலைப்போராட்டத் தியாகிகளுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா..மணிமுத்தாறு அணை கட்டிய மாவீரர் தியாகி, தென்னாட்டுச்சிங்கம் 2015 இல் நூற்றாண்டு விழா  காணும் K.T.கோசல்ராம் அவர்களின் தியாகத்தை குறைத்துக்காட்டியுள்ள ஆறுமுகநேரி பேரூராட்சியின் மீது நடவடிக்கை என்ன...
---------------------------------------------------------------------------------
இந்தியா விடுதலை பெற தியாகங்கள் பல செய்த தியாகிகளின் வரலாறு,புகழ் இவற்றை மறைக்க வேண்டும்,என்று தமிழகத்தில் சிலர் வேலை செய்து வருகின்றார்கள்.
சான்றாக ஆறுமுகநேரி பேரூராட்சி அலுவலகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக தியாகிகளின் பெயர் ஈடுபட்ட போராட்டம் சிறைவாசகாலம் ஆகியன அடங்கிய சிறப்பான கல்வெட்டு அமைக்கப்பட்டு இருந்தது. புதிய கட்டடம் கட்டும்போது பழைய கல்வெட்டு பத்திரமாக எடுத்து வைக்கப்பட்டது.
   ஆனால் தற்போதுள்ள நிர்வாகம் பொறுப்பேற்ற பின்பு அந்த கல்வெட்டு காணாமல் போயுள்ளது.உடைக்கப்பட்டதா....அல்லது மண்ணுள் புதைக்கப்பட்டதா... உடைத்தெறியப்பட்டதா..என்பது கிரிமினல் விசாரணைக்குரியது.மாண்புமிகு முதல்வருக்கு புகார் தெரிவிக்கப்பட்டு திரு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆறுமுகநேரி காவல்துறைக்கு பரிசீலிக்க அனுப்பிய உடன் .,எங்கே கிரிமினல் வழக்கு பதியப்பட்டு விடப்படுமோ என்று அவசர அவசரமாக புதிய கல்வெட்டை பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு நிர்வாகம் வைத்தது.
அதில் மணிமுத்தாறு அணையைக்கட்டுவித்த பலமுறை பாராளூமன்ற உறுப்பினராகவும்,சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த தென்னாட்டுச்சிங்கம் தமிழகத்திற்கு பல அரிய திட்டங்களைக்கொண்டு வந்த தியாகி K.T.கோசல்ராம் அவர்கள் குரும்பூர் ரயில்வே நிலையம் தீ வைத்து துப்பாக்கி பறித்த சதி வழக்கு,மற்றும் உப்புச் சத்தியாகிரகம்,மற்றும் பாதுகாப்புக்கைதியாகவும் 3 ஆண்டுகள் சிறைவாசம் இருந்துள்ளார்.அதனை சுருக்கமாக உப்புச்சத்தியாகிரகம்-6 மாதம் சிறை என்று போட்டுள்ளனர்
தாலுகாவின் தந்தை என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட திரு த.தங்கவேல் நாடார் அவர்கள் மெஞ்ஞானபுரம் போஸ்ட் ஆபீஸ் தீ வைத்த வழக்கு மற்றும் உப்புச்சத்தியாகிரகம், பாதுகாப்புக்கைதி ஆக 3 ஆண்டுகள் சிறைவாசம் அதனை சுருக்கமாக உப்புச்சத்தியாகிரகம்-6 மாதம் சிறை என்று போட்டுள்ளனர்.
திரு ஆர்.நடராஜன் அவர்கள் குரும்பூர் ரயில்வே நிலையம் தீ வைத்து துப்பாக்கி பறித்த சதி வழக்கு,மற்றும் உப்புச் சத்தியாகிரகம், மற்றும் பாதுகாப்புக்கைதியாகவும் 3 ஆண்டுகள் சிறைவாசம் இருந்துள்ளார்.அதனை சுருக்கமாக உப்புச்சத்தியாகிரகம்-6 மாதம் சிறை என்று போட்டுள்ளனர்.
திரு.ஈ.எஸ்.துரைராஜ் அவர்கள் குரும்பூர் ரயில்வே நிலையம் தீ வைத்து துப்பாக்கி பறித்த சதி வழக்கு 21மாதம் சிறைவாசம் இருந்துள்ளார்.அதனை சுருக்கமாக உப்புச்சத்தியாகிரகம்-6 மாதம் சிறை என்று அவமானப்படுத்தும் விதத்தில் போட்டுள்ளனர்.
   மேலும் பெருந்தலைவர் கு.காமராஜர் அவர்கள் ஆறுமுகநேரியின் பேரூராட்சியின் பழைய கட்டிடத்தைத் திறந்து வைத்தபோது அவர் கையால் திறக்கப்பட்ட கல்வெட்டையும் காணாமல் செய்துள்ளது தற்போதுள்ள நிர்வாகம். 

    இது குறித்து போராட்டம் திருச்செந்தூரில் நடத்தியாகிவிட்டது.செவிடன் காதில் ஊதிய சங்குபோல மாவட்ட நிர்வாகமும்.,வட்டார நிர்வாகமும் இருக்கும் மர்மம் என்ன...பேரூராட்சி வீசும் எலும்பு துண்டை நக்கிவிட்டு  நடவடிக்கை எடுக்காதது யார் என்று தியாகி வாரிசுகள் கொந்தளீப்பு.விரைவில் ஆறுமுகநேரியில் மக்கள் இயக்கமாக அகிம்சா போராட்டம் நடைபெறும்.   நாட்டுக்காக பாடுபட்டவர்களுக்கு இந்த சமுதாயம் கொடுக்கும் நன்றி இதுதானா...பஞ்சாயத்தில் பேனுக்குக் கிழே தலைவர் என்றும் கவுன்சிலர் என்றும் இருந்து ஆட்சி அதிகாரம் செய்வதற்கு காரணம் யார்..ஆகஸ்ட் 15 தேசியகொடி ஏற்றினால் மட்டும் போதாது ..முடிந்தவரை இந்த செய்தியை பகிருங்கள் நண்பர்களே........
Tags: Daily News

0 comments

Leave a Reply