ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » அரசால் வழங்கப்பட்ட நிலத்தை மீட்டு தியாகிகள் குடும்பத்துக்கு வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் மனு நீதி நாளில் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது,தியாகி வாரிசுகள் முன்னர் அரசு வழங்கிய நிலத்தை மீட்டுத்தர மனு அளித்தனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி கந்தசாமி தேவர். அவரது முதல் மனைவி கணபதி ஜானகி அம்மாள். அவரது சகோதரர் சண்முகசுந்தரம் ஆகிய மூவரும் சுதந்திரப் போராட்ட தியாகிகள். மூவருக்கும் அரசால் வழங்கப்பட்ட நிலம் தூத்துக்குடி மீளவிட்டான் கிராமத்தில் உள்ளது.
இந்த நிலம் தற்போது கிராமக் கணக்கு அடங்கலில் தவறுதலாக வேறு நபர்களின் பெயரிலும், தரிசு நிலங்கள் என்ற பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரசால் வழங்கப்பட்ட நிலத்தை மீட்டு தியாகிகள் குடும்பத்துக்கு வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: Daily News

0 comments

Leave a Reply