ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» News » தமிழக அரசு இசைப்பள்ளியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு : மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் அறிவிப்பு


லைபண்பட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ மாணவிகளை சேர்க்க வருகின்ற அக்டோபர் 2015 வரை கால நீட்டிப்பு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


இது குறித்து மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி கணேஷ் நகர் 4-வது தெருவில் அமைந்துள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், மிருதங்கம், வயலின் போன்ற பல்வேறு வகையான கலைகளில் பயில்வதற்காக மாணவமாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேற்காணும் கலைகளில் மாணவ மாணவிகளை சேர்த்திட 31.10.2015 வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இப்பள்ளியில் பயிலுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மேலும் அரசு விடுதி வசதியும், வெளியிடங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டண வசதியும் செய்து தரப்படும். எனவே தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கலை ஆர்வம் உள்ள மாணவ மாணவிகள் அனைவரும் அரசு அறிவித்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

மேலும் விபரங்களுக்கு தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, 2/3C, கணேஷ் நகர் மேற்கு, 4-வது தெரு தூத்துக்குடி-8 என்ற முகவரியிலும் தொலைபேசி எண் 0461-2300605, செல்: 9443810926 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
Tags: News

0 comments

Leave a Reply