ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » சுகாதாரத் துறையில் 89 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20-ம் தேதி கடைசி நாள்

சுகாதாரத்துறையில் காலியாகவுள்ள குழந்தைகள் சுகாதாரத்துறை அதிகாரி உள்ளிட்ட 89 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேவாணையம் வெளியிட்டுள்ளது.

 இந்த பணிகளுக்காக விண்ணப்பம் செய்பவர்கள் பி.எஸ்சி. நர்சிங் பட்டப்படிப்பு அல்லது பி.எஸ்சி பப்ளிக் ஹெல்த் நர்ஸ் பட்டப் படிப்பை முடித்திருக்கவேண்டும். வயது வரம்பு 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். மேலும் இடஒதுக்கீட்டின் கீழ் சாதிப் பிரிவினருக்கு உரிய வயதுச் சலுகைகள் இந்தப் பணியிடங்களுக்கும் உண்டு. முதலில் எழுத்துத் தேர்வை எழுதவேண்டும். 

இதில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். சம்பளம் ரூ.9.300 - ரூ34,800- ரூ.4,700 என்ற அளவில் இருக்கும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.175-ஐ செலுத்தவேண்டும். ஆன்-லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்பித் தரவேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 20-ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: Daily News

0 comments

Leave a Reply