ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » 28வது சாம்பியன் கிளப்பிற்கான கால்பந்தாட்ட போட்டிகள் நிறைவு விழா

தூத்துக்குடி மாவட்ட கால்பந்து சங்கம், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, ஸ்டெர்லைட் காப்பர், மற்றும் தாரங்கதரா கெமிக்கல்ஸ் இணைந்து நடத்திய 28வது சாம்பியன் கிளப்பிற்கான கால்பந்தாட்ட போட்டிகள் நிறைவு விழா மற்றும் பரிசு வழங்குதல் மாவட்ட விளையாட்டு அரங்கான தருவை மைதானத்தில் நடைபெற்றது. 

தமிழக கால்பந்து கழக தலைவர் ரோசையா வில்லவராயர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தூத்துக்குடி உதவி கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், ஸ்டெர்லைட் காப்பரின் தலைமை மருத்துவ அலுவலர் மற்றும் சமுதாய வளர்ச்சி தலைவர் டாக்டர். கைலாசம், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைவர் உபேந்திர காமத் மற்றும் தாரங்கதரா கெமிக்கல்சின் நிர்வாக துணை தலைவர் சுபாஷ் தன்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியில் மொத்தம் 36 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியானது திருச்சி புனித ஜோசப் மற்றும் திருவள்ளுவர் பூவை அணிகளுக்கிடையில் நடைபெற்றது. திருச்சி புனித ஜோசப் கல்லூரி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.  இறுதி போட்டியில் வென்ற அணியினருக்கு கோப்பை மற்றும் பரிசினை ஏ.எஸ்.பி. டாக்டர். அருண் சக்திகுமார் வழங்கினார். ஸ்டெர்லைட் காப்பரின் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர். கைலாசம் வீரர்களுக்கு பதக்கங்களை அணிவித்தார்.

இரண்டாம் இடம் பிடித்த அணியினருக்கு கோப்பை மற்றும் பரிசினை டி.எம்.பி. வங்கியின் தலைவர் உபேந்திர காமத் வழங்கினார். தாரங்கதரா கெமிக்கல்சின் நிர்வாக துணைத்தலைவர் சுபாஷ் தன்டன் வீரர்களுக்கு பதக்கங்களை அணிவித்தார். 
Tags: Daily News

0 comments

Leave a Reply