ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» News » பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.43, டீசல் ரூ.3.60 விலை குறைப்பு : நள்ளிரவு முதல் அமல்

Image result for பெட்ரோல்


பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.43-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.60-ம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்ததையடுத்து, இந்தியாவில் இந்த விலைக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட 3ஆவது விலைக் குறைப்பு இதுவாகும். விற்பனை வரி விதிப்பில் இருக்கும் வேறுபாடுகள் காரணமாக, மாநிலத்துக்கு மாநிலம் பெட்ரோல், டீசல் விலை மாறுபடும். தில்லியில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.64.47ஆகவும், டீசலின் விலையை ரூ.46.12ஆகவும் எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.

 சென்னையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.2.52 குறைந்து, ரூ.64.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 3.78 சரிந்து ரூ.47.30-க்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப இந்தியாவில் மாதந்தோறும் 1, 15ஆம் தேதிகளில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags: News

0 comments

Leave a Reply