ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» News » தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் 24-ம் தேதி துவங்குகிறது: சபாநாயகர் தகவல்

Image result for தலைமைச்செயலகம்

மிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24-ம் தேதி துவங்க உள்ளது.இதுகுறித்து அலுவல் ஆய்வுக்கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்தது. இதில் தி.மு.க., இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் கூட்டத் தொடடரின் முதல்நாளில் எம்.எஸ்.விஸ்வநாதன், அப்துல்கலாம் முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் எனவும் செப்டம்பர் 28ம் தேதிவரை கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

மேலும் அரசு விடுமுறை கழித்து மொத்தம் 18 நாட்கள் நடக்க உள்ள பேரவை கூட்டத் தொடரின் போது பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கையை எந்தெந்த தேதியில் நடத்தலாம் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவித்தார். கூட்டத் தொடரின் போது தேமுதிக உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும் என எதிர்கட்சியினர் வலியுறுத்தினர்.

2015-16-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 25-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதத்துக்கு முதல்வர் பதிலளித்த நிலையில், கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் முடிவடைந்தது. அரசுத் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் உள்ளிட்டவை தள்ளிவைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: News

0 comments

Leave a Reply