ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழக சபை உறுப்பினர்களாக 17 பேர் நியமனம்


துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழக சபை உறுப்பினர்களாக 17 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை துறைமுக சபை உறுப்பினர்கள் மாற்றம் செய்யப்படுவார்கள். இதில் துறைமுகத்தில் உள்ள தொழிற்சங்கம் சார்பில் 2பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கபடுவார்கள். இதில் 2015 ஜூன் முதல் 2017 மே மாதம் வரை புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்தமாதம் நடந்தது. இதில் லேபர் டிரஸ்டியாக செல்வராஜ் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள அனைவரும் மத்திய கப்பல் துறை அமைச்சகத்தால் நியமனம் செய்யப்படுவார்கள். 

இதில் கடலோர காவல்படை கமாண்டர்கள் ஆதிநாராயணன், மரைன் டிபார்ட்மெண்டைத் சேர்ந்த செந்தில்குமார், பாஜக.,வைச் சேர்ந்த எஸ்.ஆர்.சரவணப்பெருமாள், சுரேந்திரன், சுப.நாகராஜன், டாக்டர் எஸ்.ஆர்.சீனிவாச கண்ணன், துாத்துக்குடி ஸ்டுடர்ஸ் அசோசியேஷன் சார்பில் ஜோ சேசையா வில்லவராயர்,  நேஷனல் கண்டெய்னர் சார்பில் டேவிட்ராஜா, டிஎன்இபி சார்பில் தங்கராஜா, துாத்துக்குடி இந்தியன் சேம்பர் சார்பில் பொன்வெங்கடேஷ், ரயில்வே சார்பில் ரவீந்திரன், வனத்துறை சார்பில் கே.எஸ்.ரெட்டி, ராஜுரஞ்சன் ஐஎஸ், துாத்துக்குடி சுங்க இலாகா ஆணையர் உட்பட 17 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையொட்டி துாத்துக்குடி துறைமுகத்தில் நடந்த முதல் உறுப்பினர்கள் கூட்டம் துறைமுக சபை தலைவர் ஆனந்த சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய உறுப்பினர்கள் அனைவரும் பதிவியேற்றுக் கொண்டனர். துறைமுக சபை வளர்ச்சி சம்பந்தமாக நடந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Tags: Daily News

0 comments

Leave a Reply