ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» News » 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பணியில் ஈடுபடுத்தினால், அவர்களது பெற்றோருக்கு உரிய தண்டனை விதிக்கும் சட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது

Image result for குழந்தை தொழிலாளர்Image result for குழந்தை தொழிலாளர்
14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்படுவது கண்டறியப்பட்டால், அவர்களது பெற்றோருக்கு உரிய தண்டனையும், அபராதமும் விதிக்கும் சட்ட நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பங்டாரு தத்தாத்ரேயா அளித்திட்ட பதில்:
கடந்த 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1.26 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கை 43.53 லட்சமாக குறைந்துள்ளதாக, 2011- ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் முக்கிய அம்சமாக, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பணியில் ஈடுபடுத்தப்படுவது கண்டறியப்பட்டால், அவர்களது பெற்றோருக்கு உரிய தண்டனையும், அபராதமும் விதிக்கும் சட்ட நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது என்று பங்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
Tags: News

0 comments

Leave a Reply