ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » உடன்குடி பகுதியில் பழுதாகி நிற்கும் பேருந்துகள்: மாணவ,மாணவியர் அவதி

உடன்குடி பகுதியில் பழுதாகி நிற்கும் பேருந்துகள்: மாணவ,மாணவியர் அவதி 

திருச்செந்தூரி அருகே உள்ள உடன்குடி ஊரிலிருந்து அருகிலுள்ள கிராமங்களை இணைக்கும் பல நகரப் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி பாதி வழியில் நிற்பதால் பொதுமக்கள், மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
உடன்குடி பகுதியில் பெரும்பாலான கிராமங்களை இணைக்கும் நகரப் பேருந்துகளான 9பி, 6ஏ உள்ளிட்ட பேருந்துகள் அடிக்கடி பழுதாகின்றன. இதனால் காலை நேரங்களில் மாணவர்,மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இச்சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறையினர் பேருந்துகளை நன்கு பராமரித்து பழுது இல்லாமல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுத்து மாணவ மாணவியரின் கல்வி நலனைப் பாதுகாத்திட வேண்உம்
Tags: Daily News

0 comments

Leave a Reply