ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» USEFULL TO ALL » அரசு வழங்கிய இலவச நோட்டு, புத்தகங்களை ஆலய பணிக்கு பயன்படுத்திய மதபோதகர் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு

Image result for பள்ளி


அரசு வழங்கிய இலவச நோட்டு, புத்தகங்களை ஆலய பணிக்கு பயன்படுத்திய மதபோதகர் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு


அரசு இலவச நோட்டு, புத்தகங்களை ஆலய பணிக்கு பயன்படுத்திய மதபோதகர் மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்துார் தாலுகா திருமலர்புரத்தைச் சேர்ந்தவர் சாலமோன். இவர் சிறுமலர் சி.எஸ்.ஆலயத்தில் உறுப்பினராக உள்ளார். இவர் ஆழ்வார்திருநகரி காவல் ஆய்வாளரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது : நாலுமாவடி சேகர சபை போதகர் குரோவஸ் பர்னபாஸ். இவர் அங்குள்ள சி.எஸ்.ஐ.துவக்கப்பள்ளிகளில் தாளாளராக உள்ளார். அவருடைய மனைவி மிஸ்பா மார்க்ரேட் இடையன்விளை இர்டசணியபுரத்தில் உள்ள சி.எஸ.ஐ டி.என்.டி.டி.ஏ தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராக உள்ளார். 

தமிழக அரசால் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச நோட்டுகளை இருவரும் தங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்கும் ஆலய பணிகளுக்கும் பயன்படுத்தி வருகிறார்கள். பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்படுவதில்லை. நாலுமாவடி சேகரத்திற்கு உட்பட்ட ஆலடிவிளை, திருமலர்புரம், வீரமாணிக்கம், கீழநாலுமாவடி, இடையன்விளை இரட்சணியபுரம், ராஜபதி, ஓடைக்கரை, புதுவாழ்வு லட்சுமிபுரம், சண்முகபுரம் ஆகிய சபைகளில் வரவு விவரங்கள், மேற்படி இலவச நோட்டுகளில் எழுதப்பட்டு வருகிறது.

எனவே அரசுக்கு நிதியிழப்பு ஏற்படும் வகையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச நோட்டுகளை தங்களது சொந்த உபயோகத்திற்கு பயண்படுத்தி வரும் குரோவஸ் பர்னபாஸ், அவரது மனைவி மிஸ்பா மார்க்ரேட் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆய்வாளரிடம் மனு அளித்தார். 

இந்த மனுவின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையிட்டார். நீதிபதி சுந்தரேஷ், மனுவை விசாரித்து மனு மீது 4 வாரங்களில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும், குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

0 comments

Leave a Reply