ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News , News » பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில் பாரதம் தனது ரத்தினத்தை இழந்துவிட்டது என்று குறிப்பிட்டுளார்

 Image result for மோடி பிரதமர்
பாரதம் தனது ரத்தினத்தை இழந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பாரத ரத்னா விருது பெற்ற அப்துல் கலாமின் உடல் தில்லியில் இருந்து புறப்பட்டு மதுரை வருகிறது. தில்லியில் வழிநெடுகிலும் அவருக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், பாரதம் தனது ரத்தினத்தை இழந்துவிட்டது. எனினும், அந்த ஆபரணத்தில் இருந்து வீசும் ஒளியானது, அப்துல் கலாமின் கனவான உலகிலேயே "இந்தியாவை அறிவுசார் திறன் கொண்ட"நாடாக உருவாக்கும் லட்சியத்தை நோக்கி வழிநடத்தும்.
அவரை பொருத்தவரையில் ஏழ்மைக்கு மாற்றாக அவர் கருதியது மனித ஆற்றலில் உள்ள அறிவுசார் சொத்துதான்.
தனக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பிலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட அப்துல் கலாம், அசாதாரணத் திறமைகளைக் கொண்ட சாதாரண மனிதர்.
சிறு வயதில் நாளிதழை விநியோகம் செய்தார். ஆனால், இப்போது உலகம் முழுவதும் உள்ள நாளேடுகளில் அவரைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
அப்துல் கலாமின் கனவுகளை நிறைவேற்றுவதே அவருக்கு செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும் என்றார் பிரதமர் மோடி.
Tags: Daily News , News

0 comments

Leave a Reply