ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News , News » செல்போன் மூலம் காவல்துறையிடமே மோசடி -பொதுமக்கள் கவனமாக இருக்கவும்


தூத்துக்குடியில் செல்போன் மூலம்  பேசி காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 50 ஆயிரம் மோசடி செய்தவர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் ஆசிர்வாதம் (51). இவரது செல்போனுக்கு வியாழக்கிழமை வந்த அழைப்பில் பேசிய நபர் ஆசிர்வாதத்தின் வங்கிக் கணக்கு எண், ஏடிஎம் அட்டை எண் ஆகியவற்றை கேட்டாராம்.
 வங்கியில் இருந்து பேசுவதாக கூறியதால் அந்த நபரிடம் ஏடிஎம் அட்டை எண் மற்றும் அதற்கான ரகசிய குறியீட்டு எண்ணையும் ஆசிர்வாதம் கூறினாராம். சிறிது நேரத்தில் ஆசிர்வாதத்தின் வங்கிக் கணக்கில் இருந்து 49 ஆயிரத்து 959 ரூபாய் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு தகவல் வந்ததாம்.  உடனே, சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று ஆசிர்வாதம் முறையிட்டுள்ளார். இருப்பினும், தங்களால் ஏதும் செய்ய முடியாது என வங்கி அதிகாரிகள் தெரிவித்துவிட்டனராம். இதையடுத்து, மத்திய பாகம் காவல் நிலையத்தில் ஆசிர்வாதம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: Daily News , News

0 comments

Leave a Reply