ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » உஷார்......மயக்க பிஸ்கட் கொடுத்து மோதிரம், செல்போன், பணம் பறிக்கும் கும்பல்

Image result for திருட்டு

 மயக்க பிஸ்கட் கொடுத்து மோதிரம், செல்போன், பணம் பறிக்கும் கும்பல்


துாத்துக்குடி அருகே ஓடும் பஸ்சில் விவசாயியிடம் மயக்க பிஸ்கட் கொடுத்து மோதிரம், செல்போன் பறித்த ஆசாமியை போலீஸ் தேடுகிறது.

துாத்துக்குடி அருகே புதுக்கோட்டை அடுத்த பேருரணி கிராமத்தைச் சார்ந்த ஐயம்பெருமாள்(62). விவசாயியான இவர் திருப்பதி கோவிலுக்கு சென்று மோட்டை போட சென்றவர் நேற்று முன்தினம் மாலை புதுக்கோட்டை அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் அருகேயுள்ள பஸ்நிறுத்தத்தில் தலையில் காயத்துடன் கிடந்தார்.

இதைப்பார்த்த அங்குள்ளவர்கள் புதுக்கோட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகி்ச்சைக்கு பின்பு அவருக்கு நினைவு திரும்பியது. அப்போது அவர் கூறியதாவது, நான் திருப்பதி கோவிலுக்கு சென்று மோட்டை போட்டுவிட்டு திருப்பதியிலிருந்து மதுரைக்கு பஸ்சில் வந்தேன். அதன்பின் துாத்துக்குடி பஸ்சில் ஏறினேன். 

அப்போது என் சீட் அருகே 30வயது மதிக்கத்தக்க டிப்டாப் ஆசாமி ஒருவர் வந்து அமர்ந்தார். அவர் என்னிடம் பேச்சுக்கொடுத்தார். எனது சொந்த ஊர் குரும்பூர் அருகேயுள்ள போரையூர். நான் சென்னையில் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறேன். தற்போது சத்தியமங்கலம் பன்னாரி மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்மிட்டு வருகிறேன் என்று கூறினார்.நானும் திருப்பதி கோவிலுக்கு சென்று வருவதாக கூறினேன். 

திருப்பதி கோவில் லட்டு பிரசாதம் இருந்தால் எனக்கு தாருங்கள் என என்னிடம் கேட்டார். நானும் திருப்பதி லட்டில் சிறிது பிய்த்து கொடுத்தேன். அதை வாங்கி சாப்பிட்டார். பிறகு அவர் இது பன்னாரி அம்மன் கோவில் பஞ்சாமிர்தம் என்று ஒரு டப்பாவில் இருந்து சிறிது பஞ்சாமிர்தத்தை கொடுத்தார். கோவில் பிரசாதம் என்பதால் மறுக்காமல் வாங்கி சாப்பிட்டேன். அதோடு அவர் கொடுத்த பிஸ்கட்டையும் சாப்பிட்டேன். அதன்பின் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை என்று தெரிவித்தார். 

மதுரையில் இருந்து மயங்கிய நிலையில் வந்த ஐயம்பெருமாளுடன் துாத்துக்குடி வந்த ஆசாமி அவருடன் பேரூரணி டவுன் பஸ்சிலும் ஏறி வந்துள்ளார். முடிவைத்தானேந்தல் பஸ்நிறுத்தம் வந்தவுடன் அவருடன் ஒன்றாக இறங்கியுள்ளார். பஸ் நிறுத்தத்தில் யாரும் இல்லாததை பயன்படுத்தி  ஐயம்பெருமாளை தாக்கி, அவரிடமிருந்து ஒரு பவுன் மோதிரம், செல்போன் ஆகியவற்றை பறித்துள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்தது தெரியவந்தது. இதுகுறித்து புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. 

இதுபோல் புதுக்கோட்டைையச் சேர்ந்த வியாபாரி ஒருவர் சென்னைக்கு போய் விட்டு துாத்துக்குடி வரும் போதும் அவரிடமும் இதுபோல் மயக்க பிஸ்கட் கொடுத்து செயின்பறித்துள்ளனர். இதுபோன்ற கும்பல் துாத்துக்குடி பகுதியில் தொடர்ந்து கைவரிசை காட்டிவருகிறது. ஆகவே பஸ்சில் பயணம் செய்யும் போது முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் இதுபோன்று பிஸ்கட் பழங்கள் கொடுத்தால் வாங்காமல் உஷாராக இருப்பது நல்லது.


Tags: Daily News

0 comments

Leave a Reply