ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » மதுரையில் பாகுபலி திரையிடப்பட்டுள்ள சினிமா தியேட்டரில் இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

Image result for பாகுபலி படம்
மதுரையில் பாகுபலி திரையிடப்பட்டுள்ள சினிமா தியேட்டரில் இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக புரட்சிப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் பாகுபலி திரைப்படம், தமிழகத்தில் பல்வேறு தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அருந்ததியர் சமூகத்தை இழிவுபடுத்தும் வசனங்கள் இடம்பெற்று உள்ளதாகவும் அந்த வசனங்களை நீக்க வேண்டும் என்றும் புகார் கூறி, மதுரையில் புரட்சிப்புலிகள் அமைப்பு மற்றும் ஆதித் தமிழர் கட்சியினர் சில தினங்களுக்கு முன்பு, படம் வெளியான தியேட்டர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் மதுரை ரிசர்வ்லைன் அருகில், நத்தம் ரோட்டில் உள்ள பாகுபலி படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் இன்று காலை, 5 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் தியேட்டரின் காம்பவுண்டு சுவர் சிறிய அளவில் சேதம் அடைந்தது. நல்லவேளையாக அங்கு யாரும் இல்லாத தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தல்லாகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பாகுபலி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புரட்சிப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல்குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிய 5 கும்பலை தேடி வருகிறார்கள்.
Tags: Daily News

0 comments

Leave a Reply