ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News , News » பி.எஸ்.என்.எல். சேவையில் தொடர்ந்து குளறுபடி : வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி

பி.எஸ்.என்.எல். சேவையில் தொடர்ந்து குளறுபடி : வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி


பி.எஸ்.என்.எல். தொலைபேசி சேவையில் தொடர்ந்து  குளறுபடி அதிகரித்து வருவது தனியார் தொலைபேசி சேவைக்கு மாற நிறுவனமே துாண்டுவது போல் உள்ளதாக  பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள்  கடும் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதில் நாளுக்கு நாள் பின்தங்கி வருகிறது. தொலைபேசி இணைப்பில் பிரச்னைகள், குறைபாடுகளை சரி செய்யாமை போன்ற காரணங்களால் பி.எஸ்.என்.எல்., இணைப்பு பெற்றவர்கள் தொடர்ந்து, அவதிப்பட்டு வருகின்றனர். சேவை குறைபாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட பி.எஸ்.என்.எல்., நிறுவன பணியாளர்களிடம் முறையிட்டால், அதற்கு அவர்கள் உரிய பதில் அளிப்பதில்லை. 

தொடர்ந்து வாடிக்கையாளர்களை அலட்சியப்படுத்தி வருகின்றனர். இதனால் பலர் தனியார் நிறுவனங்களின் சேவைக்கு மாறி வருகின்றனர். மேலும் இணைப்புகளில் பழுது ஏற்படும் போது, அவற்றை சரிசெய்வதற்கு திறமையானவர்கள் அனுப்பப்படுவதில்லை. தொடர்ந்து பழுதுகள் ஏற்பட்டால், குறைபாடுகளை சரிசெய்ய வரும் பணியாளர்கள், தங்கள் பங்கிற்கு ஏனோதானே என்று பழுது பார்த்துவிட்டு செல்கின்றனர். இதனால் அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் அந்த இணைப்பில் பிரச்னை ஏற்பட்டு விடுகிறது. 

அந்த பழுதை நீக்க புகார் தெரிவிக்க வேண்டுமென்றால் கூட பல நாட்கள் அலைய வேண்டியிருக்கும். மேலும், தூத்துக்குடியில் பொதுமேலாளர் பதவி காலியாக உள்ளது. நெல்லை மாவட்ட பொதுமேலாளரே கூடுதல் பொறுப்பாக நிர்வாகத்தை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டணம் வசூலிப்பதிலும், கட்டணம் கட்டாதவர்களது இணைப்புகளை துண்டிப்பதலும் காட்டும் ஆர்வத்தை சேவை குறைபாடுகளை சரிசெய்வதில் காட்டுவதில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.  இதுபோன்ற காரணங்களால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறையுமே தவிர உயர வாய்ப்பில்லை.
 
தனியார் தொலைபேசியின் கைக்கூலிகளா...அல்லது அரசின் நம்பகத்தன்மையுள்ள ஊழியர்களா என்பதை பி.எஸ்.என்.எல் லின் ஊழியர்கள் காட்ட வேண்டும்.
போதுமான பணியாளர் இல்லாத குறையும் உள்ளது.புகார் கொடுத்தவுடன் சேவை கிடையாது.இந்நிலை காயல்பட்டினம் அலுவலகத்திலும் உள்ளது.
Tags: Daily News , News

0 comments

Leave a Reply