ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » உஷார்.....ஊதுபத்தி விற்பது போல் நடித்து வீட்டினுள் செல்போன், பணம் திருட்டு : வாலிபர் கைது

உஷார்.....ஊதுபத்தி விற்பது போல் நடித்து வீட்டினுள் செல்போன், பணம் திருட்டு : வாலிபர் கைது


ஆறுமுகநேரியில் ஊதுபத்தி விற்க வந்தது போல் நடித்து வீட்டினுள் செல்போன் மற்றும் பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆறுமுகநேரி முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் மகன் வினோத்குமார்(31). சம்பவத்தன்று இவரது வீட்டிற்கு ஊதுபத்தி விற்பதாக கூறி ஒருவர் வந்துள்ளார். அவரிடம் வினோத்குமாரும் 2 ஊதிபத்தி பாக்கெட்களை வாங்கி விட்டு அதற்காக பணத்தை எடுப்பதற்காக வீட்னுள் சென்றுள்ளார். இதை பயன்படுத்திய ஊதுபத்தி ஆசாமி அவரது வீட்டின் முதல் அறைக்குச் சென்று அங்கிருந்த செல்போன் மற்றும் ரூ.1500 பணத்தை திருடிவிட்டு சென்றுள்ளார். 

பின்னர் ஊதுபத்திக்கான பணத்தை கொடுக்க வினோத்குமார் வெளியே வந்தபோது ஊதுபத்தி ஆசாமி இல்லாததைக் கண்டு திடுக்கிட்டுள்ளார். மேலும் சந்தேகமடைந்த வினோத்குமார் வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கு செல்போன் மற்றும் ரூ.1500 பணத்தை காணாது கண்டு அதிர்ச்சி யடைந்துள்ளார். இந்நிலையில் இதை ஊதுபத்தி விற்க வந்தவர்தான் எடுத்திருக்க வேண்டும் என எண்ணினார். இதையடுத்து மற்றோரு வீட்டிற்கு ஊது பத்தி விற்க முற்படும் போது அவரை கையும் களவுமாக பிடித்து ஆறுமுகநேரி போலீசில் ஒப்படைத்துள்ளார்.

இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் அந்த ஊதுபத்தி ஆசாமியிடம் நடத்திய விசாரணையில் அவர், நெல்லை சுத்தமல்லியைச் சேர்ந்த பெரியசாமி மகன் சாலையப்பன்(28) என்பதும் அவர்தான் செல்போன் மற்றும் பணம் ரூ.1500யை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Tags: Daily News

0 comments

Leave a Reply