ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் அமலைச்செடிகள் அகற்றம்

 டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் ஆத்தூர் பாசனக் கால்வாயில் அமலைச்செடிகள் அகற்றம்

ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் ஆத்தூரில் முன்கார் சாகுபடிக்கு இடையூறாக இருந்த அமலைச்செடிகள் அகற்றப்பட்டன.
ஆத்தூர் பகுதி விவசாயிகளுக்கு முன்கார் சாகுபடிக்காக ஸ்ரீவைகுண்டம் தென்கால் பாசன வழியாக ஆத்தூர் குளத்திற்கு தற்போது தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் தெற்கு ஆத்தூர் மற்றும் ஆத்தூர் காவல் நிலையத்திற்கு இடைப்பட்ட பாசன கால்வாயில் அமலை செடிகள் படர்ந்துள்ளதால் நீரோட்டம் தடைபட்டு பாசன குளத்துக்கு தண்ணீர் செல்ல முடியவில்லை. மேலும், வெற்றிலை விவசாயிகள், நெல், வாழை பயிரிட்டவர்கள் தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.  இதையடுத்து ஆத்தூர் கீழ்குளம் பகுதி விவசாயிகள் சங்கம் சார்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் பாசன வாய்க்காலில் படர்ந்துள்ள அமலைச் செடிகள் அகற்றப்பட்டன.
இந்தப் பணியை டிசிடபிள்யூ நிறுவன செயல் உதவித் தலைவர் (நிர்வாகம்) மே.சி.மேகநாதன், ஆத்தூர் குளம் கீழ்ப்பகுதி விவசாயிகள் சங்கத்தலைவர் முருகானந்தம் ஆகியோர் பார்வையிட்டனர். இதில், ஆத்தூர் கீழ்ப்பகுதி விவசாயிகள் சங்கச் செயலர் முருகன், பொருளர் கிருஷ்ணகுமார், துணைத்தலைவர் ஆனந்தராஜ், துணைச் செயலர் ஜெகதீஷ், மக்கள் தொடர்பு துறை துணை மேலாளர் சித்திரைவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Tags: Daily News

0 comments

Leave a Reply