ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » தூத்துக்குடி முதல் முள்ளக்காடு வரை 8.6 கிமீ வரையிலான சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது என ஆட்சித் தலைவர் ரவிகுமார் தெரிவித்தார்.

   தூத்துக்குடி முதல் முள்ளக்காடு வரை 8.6 கிமீ வரையிலான சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது  என ஆட்சித் தலைவர் ரவிகுமார் தெரிவித்தார். 


தூத்துக்குடி மாவட்ட ஆட்சிய அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. பொதுமக்களிடம் ஆட்சியர் ரவிகுமார் மனுக்களை பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கடம்பூரில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட அம்பலத்து ஊரணி நிலம் மீட்கப்பட்டுள்ளது. 

இதுபோல் ஏரி, குளங்கள், ரோடுகள், பொதுபாதைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் அந்த நிலங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இதுதொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பன்னம்பாறை சடையனேரி கால்வாயில் தனிநபர் ஒருவர் தடுப்பணையை உடைத்து கற்களை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததன்பேரில், தடுப்பணையை கட்டித்தர அந்த நபர் சம்மதம் தெரிவித்துள்ளார். 

கோவில்பட்டி முதல் எட்டையபுரம் வரை 32.6 கிமீ சாலை ரூ.166 கோடி செலவில் 4 வழிச் சாலையாக மாற்றப்பட உள்ளது. இந்த பணிகள் 2 கட்டமாக நடைபெற உள்ளது. முதலில் 19.2கிமீ தூரம் வரையிலான சாலை 10 மீட்டர் சாலையாக மாற்றப்பட உள்ளது. இதற்காக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த பணிகள் 24 மாதத்தில் நிறைவடையும். 

தூத்துக்குடி முதல் பெரியதாழை வரை ரூ.148.60 கோடி செலவில் கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட உள்ளது. தூத்துக்குடி - முள்ளக்காடு வரை 8.6 கிமீ வரையிலான சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. முள்ளக்காட்டிலிருந்து ஆத்தூர் வரை 8.7கிமீ தூரத்திற்கு ரூ.76கோடி செலவில் 2 வழிச்சாலையாக மாற்றப்படஉள்ளது. இதில், ஒரு பெரியபாலம், 11 சிறிய பாலம், 14 குழாய் பாலம் அமைக்கப்பட உள்ளது. 

இதுபோல் ஆத்தூரிலிருந்து பெரியதாழை வரை 20.6கிமீ தூரத்திற்கு ரூ.71.90 கோடி செலவில் இருவழிசாலையாக மாற்றப்பட உள்ளது. இதில் ஒரு பெரிய பாலம், 7 சிறியபாலம், 13 குழாய் பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கான டெண்டர் வருகிற 29ம் தேதி கோரப்பட உள்ளது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்குள் இந்த பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

பழையகாயல், ஆத்தூர்-திருச்செந்தூர், மணப்பாடு, சித்தன்குடியிருப்பு ஆகிய ஊர்கள் வழியாக பைபாஸ் ரோடு அமைக்கப்பட உள்ளது. திருச்செந்தூர் கோவிலில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த ரூ.4.5கோடி செலவில் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதுதொடர்பாக நிதி பெறுவதற்காக அரசின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக பணியின் போது காலமான 4 பேரின் குடும்பத்தைச் சேர்ந்த 4பேருக்கு கருணை அடிப்படையில அரசு பணிக்கான பணி நியமன ஆணையை ஆட்சியர் வழங்கினார். பேட்டியின் உதவி ஆட்சியர் கோபால கிருஷ்ணராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ்செல்வராஜன், உதவி அலுவலர் குமார், ஆகியோர் உடனிருந்தனர்.. 


Tags: Daily News

0 comments

Leave a Reply