ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

Image result for பனிமயமாதா தங்கத்தேர்

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா இம்மாதம் 26- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய திருவிழா ஆகஸ்ட் 5-ம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 

எனினும் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்வு சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள்,ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது செலவாணி முறிவுச் சட்டத்தின்படி (Negotiable Instrument Act) பொதுவிடுமுறை நாளல்ல. இந்த விடுமுறைக்குப் பதிலாக 22 ம் தேதி (சனிக்கிழமை) அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.
Tags: Daily News

0 comments

Leave a Reply