ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » தூத்துக்குடி மாவட்டத்தில் 26-07-2015 இல் குருப் 2 தேர்வு எழுதுபவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

Image result for தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடியில் பனிமய மாதா கோவில் திருவிழா கொடியேற்றம் நடைபெறும் அதே நாளில் குரூப் 2 தேர்வு நடைபெறுவதால், ஆலய சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களில் செல்வோர் குறித்த நேரத்தில் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது தொடர்பாக ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தொகுதி-2 பணிகளுக்கான தேர்வுகள் 26.07.2015 அன்று முற்பகல் 10.00 முதல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வு இம்மாவட்டத்தில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், மற்றும் கோவில்பட்டி ஆகிய நான்கு வட்டங்களில் 53 மையங்களில் மொத்தம் 15118 விண்ணப்பதாரர்கள் இம்மாவட்டத்தில் தேர்வெழுத உள்ளனர். இத்தேர்வு பணிக்கென 10 கண்காணிப்பு குழுக்களும் மற்றும் கண்காணிப்பு பணிக்கென துணை ஆட்சியர் நிலையில் 8 பறக்கும் படைகளும்; நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு உரிய நேரத்தில் தேர்வுக்கூடத்தில் ஆஜராகிட வேண்டும். தேர்வு தொடங்கி 30 நிமிடத்திற்கு மேல் வருகை தரும் விண்ணப்பதாரர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வெழுதும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூடத்திற்கு பேஜர், செல்போன், கால்குலேட்டர், தகவல்கள் பதிவு செய்யும் மின் சாதனங்கள், குறிப்பேடு, புத்தகங்கள், உறைகள் (ஊழஎநசள) மற்றும் கைப்பைகள் போன்றவை எடுத்து வர அனுமதிக்கப்படாது.

தூத்துக்குடியில் 26.07.2015 அன்று பனிமய மாதா ஆலய கொடியேற்று விழா நடைபெறவுள்ளதால் அந்த ஆலயத்தினை சுற்றியுள்ள தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வுமையத்தினை உரிய நேரத்தில் அடைந்திட உரிய ஏற்பாடுகள் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு மையங்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் மூலம்; செய்யப்பட்டுள்ளது

Tags: Daily News

0 comments

Leave a Reply