ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » சமையல் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (ஜூலை 25)நடைபெறுகிறது.


Image result for gas cylinder
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (ஜூலை 25)நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (ஜூலை 25)  காலை 11 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில்  மாவட்ட ஆட்சியர் அலுவலக குழுக் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. எரிவாயு உருளை நுகர்வோர்கள் தங்களது குறைகளை [பெயர் மாற்றம்,சப்ளையில் காலதாமதம்]வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் அளித்திடலாம்.
எரிவாயு உருளையை டெலிவரி கொடுக்கும் பயனாளிகள் மீது ஏதும் குறைபாடுகள், நுகர்வோரை பாதிக்கும் பட்சத்தில் அதன் விவரங்களை கூட்டத்தில் எடுத்துரைக்கலாம். பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை எடுத்துரைக்க இந்தக் கூட்டம் ஒரு வாய்ப்பு என்பதால் கூட்டத்தில் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: Daily News

0 comments

Leave a Reply