ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » பிளஸ் 2 மாணவர், மாணவிகள் ஆன்லைன் மூலம் பள்ளிகளில் வேலைவாய்ப்பை பதிவு செய்யலாம்

பிளஸ் 2 மாணவர், மாணவிகள் ஆன்லைன் மூலம் பள்ளிகளில் வேலைவாய்ப்பை பதிவு செய்யலாம்


தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர், மாணவிகள் அந்தந்த பள்ளிகளிலேயே இணையதளம் மூலமாக வேலைவாய்ப்புக்காக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் து. நாகேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டில் பிளஸ் 2 தேர்வில் 18,766 மாணவர், மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதற்கான மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 15 ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை மூலம் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது.

ஒரே நாளில் பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களை நாடுவதன் மூலம் ஏற்படும் காலவிரயம் மற்றும் போக்குவரத்து செலவை முற்றிலும் தவிர்ப்பதற்காக தேர்ச்சி பெற்ற மாணவர், மாணவிகள் தங்களுடைய கல்வித் தகுதியை வேலைவாய்ப்பக இணையதளம் வாயிலாக தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.  இதற்கான ஏற்பாடுகள் பள்ளிக் கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைந்து செய்துள்ளன.

மாணவர், மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழைப் பெற பள்ளிக்குச் செல்லும் போது, தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.  மேலும் தங்களது குடும்ப அட்டையில் பதிவுதாரரின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 10ஆம் வகுப்பு கல்வித் தகுதியை ஏற்கெனவே பதிவு செய்துள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

15ஆம் தேதிமுதல் 29 ஆம் தேதிவரை வேலைவாய்ப்பு பதிவுப்பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்.  பதிவுப்பணி நடைபெறும் 15 நாள்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும். மேலும், வேலைவாய்ப்புத் துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் தவறாது இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளவும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: Daily News

0 comments

Leave a Reply