ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 144 தடை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 144 தடை உத்தரவு


வீரன் அழகு முத்துகோன் நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளத்திலுள்ள சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் நாளை (ஜூலை 11) அழகுமுத்துக்கோன் நினைவு நாள் விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உததரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நாளை (11ம் தேதி) காலை 5 மணி முதல் 12ம் தேதி அதிகாலை 5 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வகை வாடகை வாகனங்கள் நுழைவதற்கும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144ன் கீழ் மாவட்ட ஆட்சியரால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு பொருந்தாது.
Tags: Daily News

0 comments

Leave a Reply