ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » ஆறுமுகனேரியில் கருணாநிதி பிறந்தநாள் விழாதிமுக தலைவர் கருணாநிதி பிறந்த தின விழா செவ்வாய்க்கிழமை ஆறுமுகனேரியில் கொண்டாடப்பட்டது.

ஆறுமுகனேரி செல்வராஜபுரம், வடக்கு பஜார், மெயின் பஜார் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி கிளை அருகில் திமுக கட்சிக் கொடியேற்றப்பட்டது.

நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலர் ஏ.பி.ரமேஷ் தலைமை வகித்தார். நகரச் செயலர் ராஜசேகர் மற்றும் ஆறுமுகனேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் கா.ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தார். பேரூராட்சித் தலைவர் அ.கல்யாணசுந்தரம் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

மாவட்டப் பிரதிநிதிகள் பாலன், முருகேசன், ஒன்றிய பிரதிநிதி  ரவி, நகரப் பொருளாளர் வரதராஜன், எலிசா, விநாயகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Source : Dinamani.com


Tags: Daily News

0 comments

Leave a Reply