ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் அணிவிப்பு

திருச்செந்தூர் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் திங்கள்கிழமை பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் அணிவிக்கப்பட்டன.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலுக்கு வைகாசி விசாகத் திருவிழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். இந்நிலையில், பாதயாத்திரை பக்தர்களுக்கு விபத்தை தவிர்க்கும் வகையில், ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் திங்கள்கிழமை அணிவிக்கப்பட்டன. தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையம் அருகே ஸ்டெர்லைட் நிறுவன ஊழியர்கள் பக்தர்களுக்கு அணிவித்தனர்.
நிகழ்ச்சியில், நிறுவன பொதுமேலாளர் குமாரவேந்தன், திருச்செந்தூர் தேவஸ்தானம் உதவி கோட்டப் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், அலுவலக கண்காணிப்பாளர் பாலு, உதவிப் பொறியாளர் பூதலிங்கம், லோகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

courtesy: Dinamani.com
Tags: Daily News

0 comments

Leave a Reply