ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளியிலேயே வேலைவாய்ப்புக்கு பதியலாம்

பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே இணையதளம் மூலமாக வேலைவாய்ப்புக்கு பதியலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கா. சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 10ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், வியாழக்கிழமை (ஜூன் 12) முதல் அந்தந்தப் பள்ளிகளில் வழங்கப்பட உள்ளன.

சான்றிதழ்களைப் பெற்ற மாணவ, மாணவியர் தங்களுடைய கல்வித் தகுதியை வேலைவாய்ப்பக இணையதள முகவரியான www.tnvelaivaaippu.gov.in வாயிலாக தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவே பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக பள்ளிக் கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைந்து தகுந்த முன் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

மாணவ, மாணவியர் தங்களது மதிப்பெண் சான்றிதழைப் பெற பள்ளிக்குச் செல்லும்போது, தங்களது குடும்ப அட்டை மற்றும் ஜாதிச் சான்றிதழையும் உடன் எடுத்துச் செல்லவேண்டும். மேலும் தங்களது குடும்ப அட்டையில் பதிவுதாரரின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

ஜூன் 26ஆம் தேதி வரை, அந்தந்த பள்ளிகளிலே மாணவ, மாணவியர் பதிவு செய்து வேலைவாய்ப்பு அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்யப்படும் மாணவ, மாணவியருக்கு பத்தாம் வகுப்பு கல்வித் தகுதிக்கு ஜூன் 12ஆம் தேதியிட்ட பதிவு மூப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Courtesy : Dinamani.com
Tags: Daily News

0 comments

Leave a Reply