ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » கைப்பந்துப் போட்டி: மேலப்புதுக்குடி அணி வெற்றி

திருச்செந்தூர் அருகே உள்ள பூச்சிக்காட்டில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஸ்டாலின் பிறந்தநாள் விழா கைப்பந்துப்போட்டியில் மேலப்புதுக்குடி அணி வெற்றி பெற்றது.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் பூச்சிக்காட்டில் மின்னொளி கைப்பந்துப்போட்டி நடைபெற்றது. மேலப்புதுக்குடி, மெஞ்ஞானபுரம், வெள்ளாளன்விளை, கானம் கஸ்பா, வானிபன்விளை, சிவந்தி விளையாட்டுக்கழகம் உள்ளிட்ட மொத்தம் 8 அணிகள் போட்டியில் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் மெஞ்ஞானபுரம் அணியை வீழ்த்தி மேலப்புதுக்குடி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தி.மு.க. மாநில மருத்துவ அணி துணைச்செயலர் மருத்துவர் செ.வெற்றிவேல், பேரூராட்சித்தலைவர்கள் கானம் வெ.செந்தமிழ்சேகர், தென்திருப்பேரை பை.மு.ராமஜெயம் ஆகியோர் பரிசுக்கோப்பை மற்றும் பரிசுத்தொகையினை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ராகவன், முன்னாள் ஒன்றிய தி.மு.க. செயலர் கே.வி.பார்வதிமுத்து, பரமன்குறிச்சி தி.மு.க. செயலர் க.இளங்கோ, வழக்குரைஞர்கள் ஜே.எஸ்.டி.சாத்ராக், கிருபாகரன், ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் பீட்டர் பொன்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Courtesy : Dinamani.com
Tags: Daily News

0 comments

Leave a Reply