ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » தேர்தலில் பணியாற்ற பொறியியல் மாணவர்களுக்கு அழைப்பு

மடிக்கணினி பற்றாக்குறையால் மடிக்கணினி வைத்துள்ள பொறியியல் மாணவர்களை தேர்தலில் பணியாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் 2-ம் மற்றும் 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்களை மக்களவைத் தேர்தலில் வெப் கேமரா மூலம் பதிவு செய்யும் வாய்ப்பு அளிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

இதுதொடர்பாக, மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரி முதல்வர்கள் மற்றும் தாளாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைப்பெற்றது.

இதில், ஆட்சியர் பேசுகையில், மக்களவைத் தேர்தலன்று வாக்குச்சாவடி மையங்களில் வெப் கேமரா மூலம் இந்திய திருநாட்டில் எங்கு இருந்தாலும் அங்கேயே இருந்து வாக்கு மையங்களை நேரடியாக பொதுமக்கள் பார்த்துக் கொள்ளும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு மையங்கள் இருப்பதால் அனைத்து மையங்களுக்கும் தேவையான மடிக்கணினி தற்போது இல்லை. அதனால் மடிக்கணினி வைத்துள்ள அதை பயன்படுத்தக் கூடிய மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அரிய வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இவர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்கும் மதிப்பூதியமும் வழங்கப்படும் என்றார் ஆட்சியர்.


Courtesy: Dinamani.com

Tags: Daily News

0 comments

Leave a Reply