ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » திருக்குறள் போட்டி: திருச்செந்தூர் மாணவி மாநிலத்தில் 2-ஆம் இடம்

திருக்குறள் போட்டியில், திருச்செந்தூர் செந்தில்முருகன் நடுநிலைப் பள்ளி மாணவி மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மதுரை உலகத் திருக்குறள் பேரவை சார்பில் மாநில அளவில் நடந்த திருக்குறள் எழுத்துத் தேர்வில் திருச்செந்தூர் செந்தில்முருகன் நடுநிலைப் பள்ளி மாணவி இரா.ஜயந்தி மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

மதுரையில் நடந்த விழாவில், மாணவிக்கு குன்றக்குடி அடிகளார் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கி கெüரவித்தார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி நிர்வாகி இரா.சுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் மூ.முருகேசன், தமிழாசிரியை உமா உள்ளி ட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர், மாணவிகள் பாராட்டினர்.  மாநில அளவிலான திருக்குறள் போட்டியில் இப்பள்ளி இது வரை 8 முறை மாநில அளவில் 3-ம் பிடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Courtesy: Dinamani.com
Tags: Daily News

0 comments

Leave a Reply